சர்வதேச ராஜதந்திர கேமில் மூழ்கிப்போகலாம், 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தலைமையேற்று உலகத்தை ஆட்டிப் படைக்கப்போகிறீர்கள்! பொருளாதாரத்தை வளர்ப்பது, எண்ணெய், இரும்பு, அலுமினியம் போன்ற மதிப்புமிக்க வளங்களைப் பெறுவது, வலிமையான இராணுவம் மற்றும் கடற்படையை உருவாக்குவது ஆகியவையே உங்கள் இலக்காகும். மற்ற நாடுகளுடன் போர்கள், பிரிவினைவாதம் மற்றும் கொள்ளையடிப்புகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும், ஆனால் இராஜதந்திரம், ஆக்கிரமிப்பு இல்லாத உடன்படிக்கைகள், கூட்டணிகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் உலக அரங்கில் உங்கள் நிலையை வலுப்படுத்த உதவும்.
கேமின் பிரதான அம்சங்கள்:
• உங்கள் படைகளின் பயிற்சி, கட்டுமானம் மற்றும் மீள்வரிசைப்படுத்தல் மூலம் உங்கள் இராணுவத்தை வளர்த்தெடுங்கள்
• இயற்கை வளங்களைக் கட்டுப்படுத்துங்கள்: எண்ணெய் தோண்டுதல் மற்றும் இரும்பு, ஈயம் மற்றும் பிற முக்கியமான வளங்களை வெட்டி எடுத்து உங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்துங்கள்
• புதிய பிராந்தியங்களைக் காலனிப்படுத்துங்கள்
• இராஜதந்திரத்தில் பங்கேற்றிடுங்கள்: ஆக்கிரமிப்பு இல்லாத உடன்படிக்கைகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபடுங்கள், தூதரகங்களை உருவாக்குங்கள்
• உங்கள் நாட்டின் சட்டங்கள், மதம் மற்றும் கொள்கைகளை நிர்வகியுங்கள்
• லீக் ஆஃப் நேஷன்களில் சேருங்கள், சர்வதேச உறவுகளை வலுப்படுத்துங்கள், உங்கள் மக்களைப் பாதுகாத்திடுங்கள்
• அரண்களைக் கட்டுங்கள், சுரங்கங்களை வளர்த்தெடுங்கள், வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து உங்கள் நாட்டைப் பாதுகாத்திடுங்கள்
• உங்கள் அரசை ஆளவும் அதை நிலையாக வைத்திருக்கவும் உதவும் அமைச்சகங்களை மேற்பார்வையிடுங்கள்
• உளவு பார்த்தல் மற்றும் பேரழிவு நாசங்களை மேற்கொள்ளுங்கள்
• வணிகம் செய்க
இந்த கேம் பின்வரும் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது: ஆங்கிலம், ஸ்பானிஷ், உக்ரேனியன், போர்த்துகீஸ், பிரெஞ்ச், சீனம், ரஷ்யன், துருக்கிஷ், போலிஷ், ஜெர்மன், அரபிக், இத்தாலியன், ஜப்பானீஸ், இந்தோனேஷியன், கொரியன், வியட்நாமீஸ், தாய்.
புதுப்பிக்கப்பட்டது:
23 செப்., 2025